Thursday, 29 September 2011

விளம்பர அழைப்புகள் வந்தால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரூ.2.5 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் ! ! !


செல்போன் இணைப்புச் சேவைகளில் ஈடுபட்டுள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் விளம்பரங்கள் சேவை விபரங்கள், அழைப்பு திட்டங்கள் என இடையிடையே அழைப்பு மற்றும் எஸ்.எம்.எஸ்.களை அனுப்புகின்றன. இதனால், சிலர் கட்டண சேவைகளில் சிக்கி பணத்தை இழப்பதும் உண்டு.

இந்த பிரச்சனையைத் தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. “தேவையற்ற அழைப்புகளின் பதிவு” (Registration of unwanted calls) என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி தேவையற்ற அழைப்புகளை விரும்பாத நுகர்வோர் இதில் பதிவு செய்யுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

இதில் பதிவு செய்ய 1909 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லதுwww.nccptrai.gov.in என்ற இணையதளத்தில் சென்று உங்கள் செல்போன் எண்ணை பதிய வேண்டும். நீங்கள் பதிவு செய்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு விளம்பர அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ்-கள் வந்தால் நீங்கள் பயன்படுத்தும் செல்போன் நிறுவனத்திடம் புகார் கொடுக்கலாம். அவ்வாறு புகார் கொடுக்கையில் விளம்பர அழைப்பு வந்த நேரம், தேதி ஆகியவற்றையும் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் ஆன்லைனிலும் புகார் கொடுக்கலாம்.

தொல்லை செய்ய வேண்டாம் என்று பதிவு செய்தவர்களுக்கு விளம்பர அழைப்புகள் வந்தால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரூ.2.5 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது



நாம் மற்றவர்களை சார்ந்து இருப்பதைவிட வாருங்கள் நாம் சேர்ந்து இருப்போம் - திருமா அழைப்பு !


என் அருமை இஸ்லாமிய தோழர்களே
ஆண்டாண்டாய் மறுக்கப்பட்டு வந்த தலித் மற்றும் சிறுபான்மையினர் உரிமைகள் நமக்கு வேண்டும். திராவிட கட்சிகள் இஸ்லாமியர்களை கேவலம் ஓட்டுக்காக பயன்படுத்திவிட்டு தூக்கி எரியும் காலி கவராக நினைத்துவிட்டனர். ஆகவே தான் விடுதலை சிறுத்தைகள் - இஸ்லாமிய கூட்டபைப்பும் சேர்ந்து ஒரு சமூக நல்லிணக்க கூட்டணியை அமைத்து உள்ளனர். பொதுவாக இஸ்லாமிய சகோதரர்கள் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருப்பர். அதனால் தான் திராவிட கட்சிகள் நம்மீது சவாரி செய்கின்றனர். இது நமக்கான அதிகாரம் அதிகாரத்தை பறிக்கின்றனர். இந்த நிலை நீடித்தால் நாளை வரலாற்றில் தலித் மாற்றும் சிறுபான்மை இனம் இருந்ததற்கான ஆதாரத்தையே அழித்து விடுவர். உங்களின் பலத்தை இந்த உள்ளாட்சி தேர்தலில் நிருபுயுங்கள். சென்னையில் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் இஸ்லாமிய சகோதரர் எஸ்.அமீர் மேயர் பதவிக்கு போட்டியிடுகிறார். ஈரோடு, கோவையிலும் இஸ்லாமிய கூட்டமைப்பு போட்டியிடுகிறது. உங்களின் அதிகாரம் உங்கள் கையில்.
இன்று திருமாவளவன் திராவிட கட்சிகளுடன் கூட்டணி சேர முடியாமல் போனதால் இஸ்லாமிய கூட்டமைப்பை சேர்த்து கொள்ளவில்லை. அரசியலில் இஸ்லாமியர் பெருமளவில் பங்கேற்கவேண்டும் என்று பல ஆண்டுகளாக கூறி வருகிறார்......

இஸ்லாமிய சகோதரர்களே......
நாம் மற்றவர்களை சார்ந்து இருப்பதைவிட
வாருங்கள் நாம் சேர்ந்து இருப்போம்

ஜம்முகாஷ்மீரின் கண்ணீர் கதை ! தோண்டத் தோண்டப் பிணங்கள் ! ! !


சில நாட்களுக்கு முன்னால் காஷ்மீரில் அடையாளம் தெரியாத ஆயிரக்கணக்கான இளைஞர்களின் தோண்டி எடுக்கப்பட்டன உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்தச் சம்பவத்தை மத்திய அரசும் ஊடகங்களும் அப்படியே மூடி மறைத்தது ஞாபகமிருக்கலாம் அதைத்தொடர்ந்து இப்பொழுது ஜம்முவிலும் ஆயிரக்கணக்கான அடையாளம் தெரியாத இளைஞர்களிண் சடலங்கள் அங்குள்ள சவக்குழிகளில் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதை சடலங்களை குழிவெட்டி அடக்கம் செய்த முதியவரான பரித்கான் என்பவர் வெளிப்படுத்தியுள்ளார் காஷ்மீர் பற்றியெரிந்து கொண்டிருந்த முதல் பத்து வருடம் அதாவது 1990 முதல் போலிசும் ராணுவமும் கொண்டுவந்த 2500 க்கும் மேலான அடையாளம் தெரியாத சடலங்களை தான் அடக்கம் செய்திருப்பதாக அந்த முதியவர் கூறியுள்ளார் போன மாதம் வடக்கு காஷ்மீரின் சில மாவட்டங்களில் 38 சவக்கிடங்குகளில் 2730 அடையாளம் தெரியாத சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன இவற்றுள் 574 சடலங்கள் பின்னர் அடையாளம் காணப்பட்டது இதன் பின்னர் மாநில மனித உரிமைக் கமிஷன் மாநிலத்தின் வேறு பல இடங்களிலும் இது போன்று பல்லாயிரம் பேரை ராணுவமும் போலிசாரும் கொன்று புதைத்திருக்கலாம் என்று தெரிவித்ததைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரனைகளில் ஜம்முவில் உள்ள பூஞ் மாவட்டத்தில் மூன்றறை ஏக்கரில் பரந்துவிரிந்துள்ள அடக்கஸ்தலத்தில் 2500 அடையாளம் தெரியாத இளைஞர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது போலிசும் ராணுவமும் கொண்டு வந்த சடலங்களை நானும் என்னுடன் உள்ள மற்ற சிலரும் சேர்ந்து அடக்கம் செய்துள்ளதாக அங்குள்ள ஸோபி அஜிஸ் ஜு வெளிப்படுத்தியுள்ளது நாட்டையே மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கன்றது எல்லா உடல்களுமே குண்டு துளைத்த நிலையில் இருந்ததாகவும் யாருடைய முகமும் அடையாளம் தெரியாமல் இருப்பதற்க்காக சிதைக்ப்பட்டிருந்ததாகவும் பெரும்பாலும் இரவு நேரங்களில் தான் ராணுவத்தினரும் போலிசும் உடல்களைக் கொண்டுவந்திருப்பதாகவும் ஒருநாள் 16 உடல்களை ஒன்றாக ஒரே (கப்ரில்) குழியில் அடக்கம் செய்ய நேர்ந்த போது சோகத்தால் என்னுடைய மனமே கட்டுப்பாட்டை இழந்து விட்டதாக கண்ணீருடன் கூறுகின்றார் ஸோபி அஜிஸ் ராணுவத்தினருடன் நடந்த சண்டையில் கொள்ளப்பட்ட தீவிரவாதிகள் என்று சொல்லித்தான் போலிசும் ராணுவத்தினரும் உடல்களைக் கொண்டுவந்திருக்கன்றனர் சில நேரங்களில் உடல்களின் சில பாகங்கள் மட்டுமே அடக்கம் செய்ய வந்திருப்பதாகவும் ஒருநாள் உடல்கள் இல்லாமல் ஏழு தலைகள் மட்டும் வந்திருந்ததாகவும் ஆனால் போலிசார் ஏழு முழு உடல்களைக் கொண்டு வந்ததாக எழுதிக் கேட்டதாகவும் பயத்தினால் வேறோன்றும் கேட்காமல் அவர்கள் கேட்டது போல தான் எழுதிக்கொடுத்ததாகவும் ஸோபி அஜிஸ் கூறுகின்றார் 1990 காலகட்டங்களில் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியிருந்த போதுதான் அதிக அளவில் சடலங்கள் வந்து கொண்டிருந்ததாகவும் தினமும் இரண்டு மூன்று சடலங்களாவது வந்துவிடும் என்றும் பூஞ்சிலே வேறு சிலரும் உடல்களை அடக்கம் செய்ய உதவியதாகவும் உடல்களை அடக்கம் செய்த பிறகே அதிகாரிகள் அங்கிருந்து செல்வார்கள் என்றும் அவர் கூறுகின்றார் பூஞ் மாவட்டம் என்பதால் நாட்டிற்க்குள் ஊடுறுவ வந்த தீவிரவாதிகள் என்று சொல்லி சுட்டுக் கொள்ள வசதியாக இருந்ததால் வேறு பல இடங்களிலும் உள்ள இளைஞர்களைப் பிடித்துக் கொண்டு வந்து பூஞ்சில் வைத்து சுட்டுக் கொன்று அங்குள்ள அடக்கஸ்தலங்களில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவையெல்லாமே அடையாளம் தெரியாததாகவும் இருந்துள்ளது தற்பொழுது தெரியவந்துள்ளது ஜம்முவில் உள்ள மன்தி கிராமத்திலும் அடையாளம் தெரியாத நூற்றுக்கணக்கான உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த ஊரைச் சேர்ந்த ஹதிப்கான் கூறுகின்றார் கொண்டு வரப்படும் சடலங்களுக்கு உறவினர்கள் யார் என்று இல்லாததால் நாங்கள் மட்டுமே இறந்த உடலுக்குச் செய்யவேண்டிய தொழுகை உட்பட இறுதிக் கடமைகளைச் செய்து அடக்கம் செய்திருப்பதாக கூறுகின்றார் கம்பி வேலி கட்டி அடக்கஸ்தலம் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதனால் 1990 முதல் 2000 வரைக்கும் உடல்கள் வந்து கொண்டிருந்ததாகவும் பிதல் என்ற கிராமத்தில் நடந்த சண்டையில் 33 பேரின் உடல்களே முதன்முதலாக கொண்டு வந்ததாகவும் பதினொன்று பதினொன்று வீதம் மூன்று குழிகளில் 33 பேரின் உடல்களையும் அடக்கம் செய்ததாகவும் கூறினார் மேலும் ரஜீர் என்ற கிராமத்தில் உள்ள அடக்கஸ்தலத்திலும் இது போன்ற பல நூறு உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுருக்கின்றன பூஞ் மற்றும் ரஜீரி மாவட்டங்களிலும் அடையாளம் தெரியாத பல உடல்கள் அடக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் அவைகளையும் தோன்டி எடுத்து டி என் ஏ பரிசோதனை உட்பட மற்ற சோதனைகளையும் நடத்தி அடையாளம் காண வேண்டும் என்று அங்குள்ள மனித உரிமைக் கமிஷன் கூறியுள்ளது இந்தியா தன்னை ஜனநாயக நாடு என்று சோல்லிக் கொண்டாலும் காஷ்மீரில் தோண்டத் தோண்ட கிடைக்கும் இது போன்ற ஆயிரக்கனக்கான அப்பாவி இளைஞர்களை(தீவிரவாதிகளை அல்ல) கொன்று குவித்திருப்பதன் மூலம் மத்திய அரசும் இந்திய ராணுவமும் எந்த அளவிற்க்கு மிருகத்தனமாக காஷ்மீரிகளின் விஷயத்தில் செயல்பட்டுள்ளார்கள் என்பதை அறியலாம்
மலையாள நாளிதலான மாத்யமம் செய்திகளில் இருந்து தொகுக்ப்பட்டது


ன்றி http://neermarkkam.blogspot.com


Wednesday, 28 September 2011

படித்துள்ளேன் ! ஆனால், வேலை மட்டும் கிடைக்கவில்லை ? ? ?

தன்னம்பிக்கை, ஆளுமைத் திறன், மொழிப்புலமை ஆகிய மூன்றிலும் கவனம் செலுத்தாமல் இருப்பதுதான் வேலை கிடைக்காததற்கான அடிப்படைக் காரணங்கள்.படித்துள்ளேன், ஆனால், வேலை மட்டும் கிடைக்கவில்லை. இது பெரும்பாலான இளைஞர்களின் புலம்பல்.அதேபோல, மாணவப் பருவத்தில் பத்திரிகைகளை வாசிக்கும் பழக்கம் இல்லாமல், நாட்டு நடப்புத் தெரியாத தலைமுறை உருவாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.இந்தத் தலைமுறையினருக்கு இணையதளம் மூலம் அனைத்தையும் தெரிந்துகொள்ள முடியும் என்ற எண்ணம் மேலோங்கி நிற்கிறது. ஆனால், இணையதளத்தில்வெளியிடப்படும் தகவல்கள் அனைத்துமே நம்பகத்தன்மையுடையவை அல்ல என்பதை உணராதவர்களாக இருப்பது வேதனைக்குரியது.அதேபோல, மாணவர்களின் தோல்விக்குத் தாய்மொழியாம் தமிழைச் சரளமாகப் பேசத் தெரியாமல் இருப்பதும் முக்கியக் காரணமாகும். இதே நிலைதொடர்ந்தால், வரும் காலங்களில் ஆங்கில மொழிக்குச் சிறப்புப் பயிற்சி மையங்கள் செயல்படுவதைப்போல, தமிழைப் பேசவும், படிக்கவும் பயிற்சி மையங்கள் தோற்றுவிக்கும் நிலை உருவாகும். கிட்டத்தட்ட இப்போதே அந்த நிலை வந்துவிட்டதாகக்கூட கூறலாம்.மாணவரின் முதல்கட்டத் தோல்வி மொழியில் இருந்தே தொடங்குகிறது. உலக நாடுகள் சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பதற்கு அடிப்படைக் காரணம் பேச்சுரிமைதான்.ஆனால், சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகள் கடந்த பிறகும், நமது இளைஞர்கள் பேசத் தயங்கியே வாழ்க்கையை இழந்துவிட்டனர். ஆனால், வீண் பேச்சு, விவாதங்களில் மட்டும் சளைப்பதில்லை.இதை உணராமல் – உணர முயற்சிக்காமல் படித்துவிட்டேன், எனக்கு அரசுதான் வேலை அளிக்க வேண்டும் என்று காலத்தைக் கழிப்பது சுய முன்னேற்றத்துக்கும், நாட்டின் முன்னேற்றத்துக்கும் உதவாது. எனவே, ஆக்கப்பூர்வமாகவும், அறிவுப்பூர்வமாகவும் செயல்படுவார்களேயானால், இளைஞர்கள் யாரிடமும் வேலை கேட்டு நிற்க வேண்டிய நிலை ஏற்படாது.ஆளுமைத் திறன் இருந்தால் பணம் சம்பாதிக்க முடியும். பணம் சம்பாதித்தால்தான் மனிதனைச் சம்பாதிக்க முடியும் என்ற சூழல் நிலவுவது என்பது உலகறிந்த உண்மை. இந்தச் சூழலில், ஆளுமைத் திறன் வளர்த்தலில் இன்றைய இளைஞர் சமுதாயம் அக்கறை செலுத்த வேண்டும்.தாய் மொழி, தேசிய மொழி, பன்னாட்டு மொழிகளில் புலமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். இது புலம்பெயர்ந்து செல்லும் அனைவருக்கும் அடிப்படையானது, அவசியமானது. ஆனால், எத்தனை இளைஞர்கள் படிக்கும் காலத்தில் மொழி அறிதலில் கவனம் செலுத்துகின்றனர் என்ற கேள்விக்கு இல்லை என்று பதிலளிக்கும் நிலையே உள்ளது.முதுநிலைப் பட்டம் பெற்றவருக்குக்கூட தான் வாங்கிய பட்டத்தில் இடம் பெற்றுள்ள வாசகங்களின் அர்த்தம் தெரியாமல் இருப்பது கசப்பான உண்மை.புதுக்கோட்டையில் இயங்கி வரும் ஆங்கிலப் பயிற்சி நிறுவனம், தமிழகம் முழுவதும் உள்ள தனது பயிற்சி மையங்களுக்குத் தேவையான ஆசிரியர்களைத் தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள் உள்பட சுமார் 13 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். ஆனால், இவர்களில் தேர்வானவர்கள் 2 பேர் மட்டும்தான் என்பதிலிருந்து, ஆங்கில மொழி அறிவில் நமது இடத்தைத் தெரிந்து கொள்ளலாம்.வறுமையால் படிக்க இயலாத சூழலில் எந்த வேலையும் செய்யலாம் என்ற சூழல் இருந்தது. ஆனால், இன்று உலகமே உள்ளங்கைக்குள் வந்துவிட்ட நிலையில், ஆசிரியர் பட்டதாரிகள், முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் சாராயக் கடைகளில் பணிக்குச் செல்வது அவர்கள் தகுதியை அவர்களே தாழ்த்திக் கொள்கிறார்கள் என்றுதானே அர்த்தம்.நமது பள்ளிகளில் பாடங்கள் மட்டுமே போதிப்பது, தன்னம்பிக்கை, ஆளுமைத்திறன், உலக விஷயங்களைப் போதிக்காதது ஆகியனவே இதற்கெல்லாம்அடிப்படைக் காரணம். அந்தக் காலத்தில் இருந்ததைப்போல நீதி போதனை வகுப்புகளை பள்ளிகளில் மீண்டும் தொடங்க வேண்டும். அதில் கூறப்படும் நீதிக் கதைகளைக் கேட்காமல் பிள்ளைகள் வளர்வதால்தான் நேர்மை, நியாயம், நீதி, மனசாட்சி போன்றவை எங்கே கிடைக்கும்? என்ன விலை எனக் கேட்பதுடன், குறுக்கு வழியில் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் நிலை அதிகரித்துள்ளது.பள்ளிகளில் பொது அறிவை வளர்க்கும் போக்கு அதிகரிக்க வேண்டும். தினமும் நாளிதழ்கள், வார இதழ்களைப் படித்து, அதில் உள்ள நல்ல விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். இதற்கான களமாக நூலகங்களை உருவாக்க வேண்டும். அப்போதுதான் மாணவர்கள் அறிவுத் திறனுடன் ஆளுமைத் திறனையும் பெற முடியும். இந்தத் தகுதிகளை வளர்த்துக் கொண்டால்… யாருக்கும் வேலை இல்லை என்ற கேள்வி தானாகவே மறைந்துவிடும்.
நன்றி:–ஆர். மோகன்ராம் – தினமணி

நாளொரு நபி மொழி அறிந்து கொள்வோம் ! ( 29 .09 .2011 )



நாளொரு நபி மொழி அறிந்து கொள்வோம் ! ( 29 .09 .2011 )



நான்கு விஷயங்களுக்காக பெண் மணமுடிக்கப்படுகிறாள்,
அவளுடைய செல்வத்திற்காக,
அவளுடைய குலச் சிறப்புக்காக,
அவளுடைய அழகுக்காக,
அவளுடைய மார்க்கப்பற்றுக்காக !
நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும்,
உமக்கு நலம் உண்டாகட்டும் ! - நபி(ஸல்)
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)
நூற்கள்: புகாரி, முஸ்லிம்

Tuesday, 27 September 2011

ஒரு நாளைக்கு சுமார் 3 லட்சம் A4 பேப்பர்கள் வீணாவதை சேமிக்க முடியும் !

இப்பொழுது பெரும்பாலானவர்கள் விரும்பி பயணிப்பது ரயில்களில் தான். விரைவாகவும் அதே செலவு குறைவாகவும் தொல்லை இல்லாமல் தூங்கி கொண்டே செல்லலாம் என்று அனைவரும் ரயிலில் செல்வதையே விரும்புகின்றனர். எந்த சிரமமும் இன்றி ஆன்லைனில் ட்ரெயின் டிக்கெட்டுக்களை பதிவு செய்யும் வசதியும் ரயில் பயணிகளுக்கு உள்ளது. இதன் மூலம் ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்து பின்னர் நமக்கு கொடுக்கப்படும் E-Ticket(ERS)பிரிண்ட் எடுத்து கொண்டு சென்று விடலாம். பரிசோதகர் கேட்டால் அந்த E-Ticket (ERS)காட்டினால் போதும். இந்த முறை தான் இது வரை அனைவராலும் கடைபிடிக்கப் பட்டிருந்தது.
இப்பொழுது ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்பவர்களுக்கு மேலும் ஒரு புதிய சலுகையாக இனி அந்த E-Ticket(ERS) பிரிண்ட் கூட எடுத்து செல்ல வேண்டாம். VRM (Virtual Reservation Message)எனப்படும் Screen Shot இருந்தாலே போதும். நீங்கள் டிக்கெட் பதிவு செய்து முடிந்ததும் வரும் E Ticket ஐ ஒரு Screen Shot எடுத்து உங்கள் மொபைலிலோ,லேப்டாப்பிலோ அல்லது ஐ-பேட் போன்றவற்றில் சேமித்து கொண்டால் போதும். டிக்கெட் பரிசோதகர் கேட்கும் பொழுது அந்த screen Shot மற்றும் உங்களுடைய ID Proof ஒரிஜினல் காண்பித்தால் போதும் நீங்கள் பயணம் செய்யலாம். (ID Proof இல்லாமல் சென்றால் இந்த வசதியை அனைவரும் பயன்படுத்தினால் ஒரு நாளைக்கு சுமார் 3 லட்சம் A4 பேப்பர்கள் வீணாவதை சேமிக்க முடியும் என்கிறது ரயில்வே நிர்வாகம். இந்த வசதியின் மூலம் டிக்கெட் பிரிண்ட் வீட்டில் மறந்து விட்டு போகும் பயணிகள் கவலையே பட வேண்டியதில்லை.

Monday, 26 September 2011

உள்ளாட்சி தேர்தல் விளக்கம் !

மொத்த பதவிகள்


தேர்தல் அட்டவனை


டெபாசிட் தொகை



எவ்வளவு செலவு செய்யாலாம் ? ? ? ? ?



முஸ்லிம் மாணவிகளை தேர்வு எழுத அனுப்பாமல் முடக்கி வைப்பு ! தமிழக அரசே ஏர்வாடி மேல்நிலைப்பள்ளியில் தேர்வு மையம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் ! ! !

ஏர்வாடி அரசு மேல் நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு மையம் இல்லாததால் மாணவ, மாணவிகள் பெரும் அவதியடைகின்றனர். ஏர்வாடி அரசு உயர்நிலைப்பள்ளி 2000ல் மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு ஆயிரத்து 200க்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். அரசு பொது தேர்வு எழுதுவதற்கு 11 கி.மீ.,தொலைவில் உள்ள கீழக்கரை செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர். இதனால் மாணவர்களுக்கு மன உளைச்சலும், கால விரயமும் ஏற்படுகிறது.

இதில் மாணவிகள்தான் பெரும் அவதியடைகின்றனர்.நடப்பு கல்வியாண்டில் 10ம்வகுப்பில் 246,பிளஸ் 2 வகுப்பில் 162 பேரும் தேர்வு எழுத உள்ளனர்.பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் துல்கருணை பாட்சா கூறியதாவது: நீண்ட தூரம் செல்ல வேண்டும் என்பதால், பாதுகாப்பு கருதி கிராமப்புற பெற்றோர் முஸ்லிம் மாணவிகளை தேர்வு எழுத அனுப்பாமல் முடக்கி விடுகின்றனர். இதனால் மாணவிகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. இது குறித்து கடந்த ஆட்சியில் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. மாணவர்களின் நலனுக்கு பல்வேறு திட்டங்களை அறிவிக்கும் அ.தி.மு.க.,அரசு ஏர்வாடி மேல்நிலைப்பள்ளியில் தேர்வு மையம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

எச்சரிக்கை வீட்டு சாவியை நிலை வாசலில் வைக்கதிர்கால் !

பரமக்குடியில் கிராமங்களில் உள்ள வீடுகளில் நகைகள் திருடிய இரண்டு சிறுவர்கள் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்து 66 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர் பரமக்குடி மாதவன் நகரை சேர்ந்த செல்வபிரகாஷ், 19, இவனது தம்பி, மற்றொரு 17 வயது கீழாம்பலை சேர்ந்த சிறுவன் ஆகியோர் கூட்டாக சேர்ந்து, பல இடங்களில் திருடியதும் தெரியவந்தது. போலீசார் மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 66பவுன் நகைகள், வெள்ளி கொலுசுகள் மற்றும் மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சிறுவர்களிடம் நடத்திய விசாரணையில், அரியனேந்தல், முனியாண்டிபுரம், பொட்டிதட்டி , முத்துவர்ணபுரம் , தண்டராதேவிபட்டிணம் , வெங்கட்டான்குறிச்சி, சுப்புராயபுரம் ஆகிய கிராமங்களில் 100நாள் வேலைக்கு செல்லும் வீடுகளை குறிவைத்து திருடியுள்ளனர். கிராமங்களில் வெளியே செல்லும்போது, வீட்டு சாவியை நிலை வாசலில் வைத்து வீட்டு செல்வதை நோட்டமிட்டு, இருவர் காவலுக்கு நின்று கொண்டு. ஒருவன் மட்டும் வீட்டில் புகுந்து நகைகளை திருடியதாக, தெரிவித்துள்ளனர்.

நாளொரு நபி மொழி அறிந்து கொள்வோம் ! ( 27 .09 .2011 )

மிகப்பெரும் பாவங்களில் ஒன்று பெற்றோரை ஏசுவது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது "அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் எவ்வாறு தனது பெற்றோரை ஏசுவார்? என்று கேட்கப்பட்டது.
அதற்கு ஒருவர், மற்றவரின் பெற்றோரை ஏசும்போது அவர், இவரது பெற்றோரை ஏசுவார். இதுதான் பெற்றோரை ஏசுவதாகும்

நூல்: புகாரி, முஸ்லிம்



இளையான்குடியில் துப்பாக்கி சூடு நடத்திய டி.எஸ்.பி., திடீர் இட மாற்றம் !

பரமக்குடி கலவரத்தன்று இளையான்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்திய, டி.எஸ்.பி., இளங்கோ கன்னியாகுமரிக்கு திடீரென மாற்றம் செய்யப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் கடந்த 11ம் தேதி இமானுவேல் சேகரன் நினைவு தின கூட்டத்திற்கு சென்றவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே பரமக்குடி ஐந்து முனை சந்திப்பில் தகராறு ஏற்பட்டு, துப்பாக்கிச்சூடு நடந்தது. இதை கண்டித்து, அன்று மாலை 6 மணிக்கு, ஒரு பிரிவினர் இளையான்குடி போலீஸ் ஸ்டேஷன் அருகே மறியலில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பில் இருந்த டி.எஸ்.பி., இளங்கோ,கூட்டத்தை கலைக்க, டி.எஸ்.பி., துப்பாக்கி சூடு நடத்தினார். இதில், இளையான்குடி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மாணவர் ஆனந்த்,16, காயமடைந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இந்நிலையில், இளையான்குடியில் துப்பாக்கிசூடு நடத்திய டி.எஸ்.பி., இளங்கோ கன்னியாகுமரி மாவட்ட குற்றப்பதிவேட்டு கூடத்திற்கு திடீர் மாற்றம் செய்யப்பட்டார். சென்னை நகரில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த எம்.ஸ்டாலின் சிவகங்கைக்கு மாற்றப்பட்டார்.

Sunday, 25 September 2011

அனைவரும் தூஆ செய்வோமகா !



கடந்த 01.09.2011 அன்று பஹ்ரைன் நாட்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் அப்துல் ரஹ்மான் ஷரிப் (43 ) என்ற சகோதரர் பலத்த அடிபட்டு சுய நினைவு இழந்துள்ளார்.உடனடியாக பஹ்ரைன் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்துல் ரஹ்மான் ஷரிப். தீவிர சிகிச்சைக்குப் பின் தனிப்பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.அனாலும் சகோதரர் அப்துல் ரஹ்மான் ஷரிப் கண் விழிக்காமல், உணர்வற்ற நிலையிலே உள்ளார் சகோதரர் அப்துல் ரஹ்மான் ஷரிப் விரைவில் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனிடம் நாம் அனைவரும் தூஆ செய்வோமகா !

சகோதரர் அப்துல் ரஹ்மான் ஷரிப் வேலூரைச் சேர்ந்தவர் சவுதி அரேபியாவில் உள்ள தாமமில் A /C கம்பனியல் வேலை பார்க்கிறார்.மேலும் இவர் தாமம் த மு மு க கிளை நிர்வாகியும் ஆவார்

நாளொரு நபி மொழி அறிந்து கொள்வோம் ! ( 26 .09 .2011 )

உன் சகோதரன் முகத்தைப் புன்முறுவலுடன்

பார்ப்பது உட்பட எந்தவொரு நற்காரியத்தையும்

தாழ்வானதாகக் கருதாதே ! - நபி(ஸல்)

அறிவிப்பாளர் : அபூதர்(ரலி)
நூல்: முஸ்லிம்

நாளொரு நபி மொழி அறிந்து கொள்வோம் !

எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஒரு மனத்துன்பம், உடல் நோய், துக்கம் அல்லது கவலை நேரிட்டு அதனை அவன் பொறுமையுடன் சகித்துக் கொண்டால் அதன் விளைவாக அல்லாஹ் அவனது தவறுகளை மன்னிக்கின்றான். எந்த அளவுக்கு எனில் அவனுக்கு ஒரு முள் குத்திவிட்டால் அதுவும் அவனுடைய பாவங்களை மன்னித்திடக் காரணமாகின்றது - நபி(ஸல்)
நூற்கள்: புகாரி, முஸ்லிம்


Saturday, 24 September 2011

புகை பிடிக்கும் சஹோ தார்ஹலே !

சிகரெட் பிடிப்பவர்களுக்கு தினசரி நடவடிக்கைகளில் 3ல் ஒரு பங்கு ஞாபக மறதி ஏற்படும் என்று தெரியவந்துள்ளது. மது குடிப்பவர்களுக்கு ஞாபக மறதி ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக முன்னர் ஆய்வுகள் தெரிவித்தன. தற்போது சிகரெட் பிடித்தாலும் ஞாபக மறதி ஏற்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். சிகரெட் பிடிப்பதால் ஏற்படும் பிரச்னை குறித்து டாக்டர் டாம் ஹெபர்னன் தலைமையில் நார்த்தம்ப்ரியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த குழு ஆய்வு நடத்தியது.

அதற்காக சிகரெட் பிடிப்பவர்கள், அதை நிறுத்தியவர்கள் மற்றும் சிகரெட்டே பிடிக்காதவர்கள் என 3பிரிவாக பிரித்து அவர்களின் நினைவாற்றலை சோதிக்கும் வகையில் பல கேள்விகள் கேட்டனர். அதில் சிகரெட் பிடிக்காதவர்களைவிட, பிடிப்பவர்களுக்கு தினசரி நடவடிக்கைகளில் 3ல் ஒரு பங்கு ஞாபக மறதி ஏற்படுவது தெரியவந்தது. அதாவது, நினைவாற்றல் சோதனையில் சிகரெட் பிடிப்பவர்களுக்கு 59 சதவீத ஞாபக சக்தியும், சிகரெட் பிடிப்பதை கைவிட்டவர்களுக்கு 74சதவீதமும், சிகரெட்டே பிடிக்காதவர்களுக்கு 81 சதவீத ஞாபக சக்தி இருப்பது தெளிவானது.

சிகரெட் பிடிப்பதால் ஞாபக மறதி ஏற்படுவது குறித்து மேற்கொண்ட ஆய்வு, புகை பிடித்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்துக்கு பயனுள்ளதாக இருக்கும். சிகரெட் பிடிப்பதை நிறுத்தினால் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் என்பதை நாம் ஏற்கனவே அறிவோம். ஆனால், நாங்கள் மேற்கொண்ட இந்த ஆய்வு சிகரெட் பிடிப்பதை நிறுத்தினால் நினைவாற்றல் பாதிக்காமல் இருக்கும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது என்று டாம் ஹெபர்னன் தெரிவித்தார்.

Friday, 23 September 2011

எமேனேசுவரத்தில் தரை பாலத்திற்கு பதிலாக மேம் பாலம் கட்ட நடவடிக்கை எடுப்பேன் !

பரமக்குடி நகரசபை தி.மு.க. வேட்பாளராக சேது கருணாநிதி (வயது26) அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் பட்டதாரி. இவருக்கு சுதாராணி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். முழு நேர அரசியல்வாதியாக உள்ளார். தற்போது இவர் தி.மு.க. நகர செயலாளராக இருந்து வருகிறார்.
வேட்பாளர் சேது கருணாநிதி நிருபர்களிடம் கூறியதாவது:-
பரமக்குடி நகரசபை தி.மு.க. வேட்பாளராக அறிவித்த தி.மு.க. தலைவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நான் நகர சபை தலைவராக வெற்றி பெற்றால் பரமக்குடியில் உள்ள அனைத்து பிரச்சினை களுக்கும் தீர்வு காண் பேன். பாதாள சாக்கடை திட்டத்தை கொண்டு வந்து முழுமையாக நிறைவேற்ற பாடுபடுவேன். போக்குவரத்து நெரிசலை குறைக்க வைகை ஆற்றின் இருபுறமும் ரோடு வசதி ஏற்படுத்தி தர பாடுபடுவேன்.
எமேனேசுவரத்தில் தரை பாலத்திற்கு பதிலாக மேம் பாலம் கட்ட நடவடிக்கை எடுப்பேன். புதிய நகரசபை கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப் படும். மாநகராட்சிக்கு இணையாக பரமக்குடி நகரசபையை கொண்டுவர பாடுபடுவேன். எனவே வருகிற உள்ளாட்சி தேர் தலில் என்னை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

பரமக்குடி நகராட்சி தி. மு. க. வேட்பாளர் திரு. சேது .கருணாநிதி !


பரமக்குடி நகராட்சி

தி. மு. க. வேட்பாளர் திரு. சேது .கருணாநிதி


பரமக்குடி நகரசபை தி.மு.க. வேட்பாளராக சேது கருணாநிதி (வயது26) அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் பட்டதாரி. இவருக்கு சுதாராணி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். முழு நேர அரசியல்வாதியாக உள்ளார். தற்போது இவர் தி.மு.க. நகர செயலாளராக இருந்து வருகிறார்.


பரமக்குடி நகராட்சி தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., சார்பில் கீர்த்திகா. வேட்பு மனுத்தாக்கல் செய்தார் !

பரமக்குடி நகராட்சி தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., சார்பில் போட்டியிட கீர்த்திகா(நகராட்சி தலைவர்) நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார். முன்னாள் அமைச்சரும், மாவட்ட பொறுப்பாளருமான அன்வர்ராஜா, மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான முருகன், பரமக்குடி எம்.எல்.ஏ., டாக்டர் சுந்தரராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., பாலுச்சாமி, நகர செயலாளர் ஜமால், மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் முனியசாமி உட்பட கட்சியினர் உடனிருந்தனர். கீர்த்திகா கூறியதாவது: கடந்த ஐந்து ஆண்டுகளில் நகராட்சியில் பல்வேறு திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ரயில்வே லைனையொட்டி, கடந்த 40 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த வாறுகால் சீரமைக்கப்பட்டுள்ளது. தானியங்கி குப்பை வாகனம் மூலம் வார்டு முழுவதும் தொட்டிகள் அமைத்து நகர் சுத்தமாக வைக்கப்பட்டுள்ளது. பாதாளசாக்கடைத்திட்டம், புறவழிச்சாலைத் திட்டம், சூப்பர் மார்க்கெட், புதிய பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பல திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன, என்றார்.

Thursday, 22 September 2011

சமுதாய ஒற்றுமைக்கு பாடுபடுவோம் ! ! !

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் களம் (2009) சூடு பிடித்திருக்கிறது. அரசியல் கட்சிகள் தங்களுக்குள்ள மக்களின் செல்வாக்கை கோடிகளில் பேரம் பேசி அரசியல் சூதாட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றன.

ஆனால் காலம் காலமாக அரசியல் சூதாடிகளால் வஞ்சிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டு வந்திருக்கிறது இஸ்லாமிய சமுதாயம்.

முஸ்லிம்களின் நெஞ்சிலே நேரடியாகக் குத்தும் தலைவரையுடைய ஒரு அரசியல் கட்சி; ‘முஸ்லிம்களை எங்களின் நெஞ்சிலே சுமந்திருக்கிறோம்’ என்று கூறிவிட்டு பிறகு நமது சமுதாய மக்களின் முதுகில் குத்தும் தலைவரையுடைய மற்றொரு மற்றொரு அரசியல் கட்சி.

அனைத்து சமுதாய மக்களை விடவும் கீழ் நிலையிலுள்ள இந்த முஸ்லிம் சமுதாயத்தை இவர்களில் எவராவது தூக்கி விடமாட்டார்களா என்ற நப்பாசையில் இந்த கட்சிகளை மாறி மாறி ஆதரித்துவந்த நமது சமுதாய மக்கள் இம்முறை இவ்விரு கட்சிகளினாலுமே மிக கேவலமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இதற்கு காரணம், அற்பக் காரணங்களுக்காகவும், சில கொள்கை வேறுபாடுகளுக்காகவும், சமுதாயத்தின் மீதுள்ள அக்ரையைவிட தாம் சார்ந்திருக்கும் இயக்கத்தின் மீதுள்ள அதீத பற்றின் காரணமாக தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் அரசியல் அநாதைகளான இந்த முஸ்லிம் சமுதாய மக்களின் ஒரு பிரிவினர் வேறு வழியில்லாமல் தம்மை ஆதரித்து விடுவார்கள் என்ற அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையே ஆகும். இதை நமது சமுதாயமும் முன்சென்ற தேர்தல்களில் நிரூபித்திருக்கின்றது. இந்த தேர்தலிலும் அதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

- முஸ்லிம்களின் இந்த ஒற்றுமையின்மையே அவர்களுக்கு இந்த நம்பிக்கையைத் தந்து முஸ்லிம்களை கேவலமாக நினைத்து அவர்களை ஒதுக்கித்தள்ள துணிய வைத்தது

- முஸ்லிம்களின் இந்தப் பிரிவினையே காலங்காலமாக நம்மை அரசியல் அநாதைகளாக்கியது!

- அற்ப சில காரணங்களுக்காக கேவலமாக அடித்துக் கொள்ளும் இந்த தன்மையே பிற சாதியியக்கங்களை விட பன்மடங்கு அதிகமாக இருக்கும் நாம் அந்த சாதி இயக்கங்களை விட கேவலமான நிலைக்குத் தள்ளப்பட காரணமாக அமைந்தது!

- நம்மவர் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள பொறாமை மற்றும் காழ்ப்புணர்வுகளே, ‘வேண்டுமானால் ஒரு சீட் தருகிறோம்! அதுவும் எங்கள் சின்னத்தில் நிற்க வேண்டும்’ என்று கூறும் துணிவைத் அவர்களுக்குத் தந்தது.

சுயநலமும், பதவி வெறியும், அற்ப உலகாசைகளையும் கொண்ட தலைவர்கள் திருந்தினார்களோ இல்லையோ, ‘குனிய குனியத் தான் குட்டுப்படுவோம்’ என்பதை உணர்ந்துக் கொண்ட இஸ்லாமிய சமுதாய மக்கள் விழித்துக் கொண்டு விட்டார்கள். இதைப் பார்க்கும் போது சந்தோஷமாகயிருப்பினும் இன்றளவும் சுயநலம், காழ்புணர்வு, சமுதாய நலனை விட சொந்த நலனில் அக்கரையுள்ள சிலர் சமுதாயத்தைக் கூறு போட நினைப்பதை பார்க்கும் போது நெஞ்சம் பதறுகிறது. இந்த சமுதாயம் ஒன்றுபட வாய்ப்பே இல்லையா? என்று ஏங்குகிறது மனம்.

என தருமை இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே! அண்ணன் தம்பிகள், மாமன் மச்சான்களாக வாழ்ந்த நம்மடையே பிரிவுகள் பல ஏற்பட்டிருப்பினும், நாம் அனைவரும் நம்முடைய இறைவனாக அல்லாஹ்வையும், இறுதி தூதராக முஹம்மது (ஸல்) அவர்களையும், புனித வேதமாக திருக்குர்ஆனையும் ஏக மனதாக ஏற்றுக் கொண்டிருக்கின்றோம் அல்லவா?

நாம் ஒன்றுபட இதுவே சரியான தருணம்! நமக்குள் பல கருத்து வேறுபாடுகள் இருப்பது என்பது உண்மை தான்! ஆனால் இவைகள் அனைத்தும் நம் அனைவருக்கும் பொதுவான மற்றும் நாம் அனைவரும் ஏக மனதாக ஏற்றுக்கொண்டிருக்கக் கூடிய அல்-குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை புரிந்துக் கொள்வதில் ஏற்பட்டிருக்கின்ற தடுமாற்றங்களினால் வந்த சகோதர கருத்து வேறுபாடுகளேயன்றி வேறில்லை என்பதை நாம் உணர வேண்டும். இவைகள் அனைத்தும் முஸ்லிம்களுக்குள் தீர்த்துக்கொள்ளப்பட வேண்டிய உள் விவகாரங்களாகும். நாம் எக்காரணத்தை முன்னிட்டும் இந்த புரிந்துக் கொள்வதில் ஏற்பட்டிருக்கின்ற கருத்து வேறுபாடுகளின் காரணமாக நாம் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதன் மூலம் “முஸ்லிம்கள்” என்று சொல்லப்படக் கூடிய நம் அனைவர்களையும் ஒட்டுமொத்தமாக வேரறுக்கத் துடித்துக் கொண்டிருக்கும் பாசிச சக்திகளுக்கு உதவும் வகையில் பிரிந்து விடக்கூடாது.

நம் சகோதர முஸ்லிம்களும் அல்-குர்ஆன், சுன்னாவைப் பின்பற்றி உண்மையான முஸ்லிம்களாக வாழவேண்டும் என்று நாம் ஆசைப்படுவதில் தவறில்லை தான். மேலும் இது உண்மையான ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இருக்கவேண்டிய பண்பும் கூட என்பதை நாம் அறிவோம். அவர்கள் நமது கருத்துக்கு ஒத்துவரவில்லை என்ற ஒரே காரணத்திற்காக, நாம் அனைவரும் ஏற்றுக் கொண்டிருக்கின்ற ஏக இறைவனையும், இறுதி தூதரையும், இறுதி வேதத்தையும் நிரகாரிப்பவர்களோடு சேர்ந்துக் கொண்டு நமது இஸ்லாமிய சகோதரர்களையே எதிர்ப்பது என்பது எவ்வகையில் நியாயம் என்பதை சற்று நடுநிலையுடன் நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். நம் சகோதரர்கள் ‘நம் இயக்கத்தை ஆதரிக்கவில்லை’ என்ற ஒரே காரணத்திற்காக இறை நிராகரிப்பாளர்களுக்கு ஆதரவாக நம் சகோதரர்களுக்கு எதிராக செயல்படுவது என்பது எவ்வகையில் நியாயம்?

வேதக்காரர்களிடம் கூட ‘வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்’ (அல்-குர்ஆன் 3:64)’ என்ற அடிப்படையில் ஒற்றுமைக்கு வலியுறுத்தும் மார்க்கத்தையுடைய நாம் நமக்குள் பிரிந்துக் கொண்டு சண்டையிட்டுக் கொள்வது எவ்வகையில் நியாயம் என்பதை சற்று நிதானமாக சிந்திக்கக் கடமைபட்டுள்ளோம்.

எனவே என தருமை சகோதர, சகோதரிகளே! இத்தனை நாள் அரசியல் அநாதைகளாய் நாம் வாழ்ந்தது போதும்! இரக்கப்பட்டு பிச்சை போடுவது போன்று அவர்கள் தருகின்ற ஒரு சில இடங்களுக்காக அருகதையற்ற அரசியல்வாதிகளின் காலைக் கழுவும் பழக்கத்தை கைவிட்டுவிட்டு சமுதாயத்தின் நலன்கருதி வீழ்ந்து கிடக்கும் சமுதாயத்தை தூக்கி நிறுத்துவதற்காக நாம் ஓரணியில் திரளவேண்டிய அவசியமான காலக்கட்டம் இது.

இந்திய மண்ணிலே முஸ்லிம்களை ஒட்டுமொத்தமாக துடைத்தெறிய விரும்பி பற்பல சதிவேலைகளைத் திட்டமிட்டுக் கொண்டிருக்கும் பாசிச சக்திகளுக்கிடையிலும் பல பிரிவுகள் இருந்தாலும் அவர்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாடம் ஒன்றுள்ளது. ஆம் அது தான் தேர்தல் நேரத்தின் போது அந்த பாசிச சக்திகள் ஒன்று பட்டு அவர்களின் அரசியல் பிரிவுக்கு ஆதரவளிப்பது ஆகும்.

அது போல் நாமும் நம்முடைய கருத்து வேற்றுமைகளை எல்லாம் நமக்குள் பேசி தீர்த்துக் கொள்வோம்! பிறரிடம் நமது சமுதாயத்தை அடகு வைக்கமாட்டோம்! என்ற எண்ணத்தில் ஒன்றுபட்டு நமது பொது எதிரிகளை எதிர்கொள்ள முன்வர வேண்டும். இன்ஷா அல்லாஹ் இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் நமக்குள் இருக்கும் இந்த கருத்து வேறுபாடுகள் இறைவனருளால் சுமூகமாக தீர்கப்பட்டு விடும் என்று இறைவனின் மேல் ஆதரவு வைத்து உறுதியாக நம்புவோம்.

தற்போது நமது ஒற்றுமையின் வலிமையை நிரூபிப்பதற்காக இன்று நம்மடையே வந்திருக்கும் தேர்தல் என்னும் இந்த வாய்ப்பை இன்ஷா அல்லாஹ் நாம் நன்றாகப் பயன்படுத்திக் கொள்வோம். முஸ்லிம்களாகிய நம் அனைவரையும் அழிக்கத் துடித்துக் கொண்டிருக்கும் பொது எதிரிகளைத் தாக்குப்பிடிப்பதற்காகவும், நம் நெஞ்சில் மற்றும் முதுகுகளில் குத்தும் இயக்கங்களுக்கு சரியான பாடம் புகட்டுவதற்காகவும், ஒரு சீட்டுக்காக அவர்களிடம் கெஞ்சிக் கொண்டிருந்த காலம் போய் அவர்கள் நம் ஆதரவை வேண்டி நம் கதவை தட்டுவதற்காகவும் நாம் அவசியம் ஒன்றுபட்டே ஆக வேண்டும்.

சமுதாயத்தில் அக்கரையுள்ள முஸ்லிம்கள் அனைவரும் நம்முடைய முஸ்லிம்களுக்குள் பிரிவுகள் ஏற்பட்டு விடாமல் பார்த்துக் கொள்வது மிக மிக அவசியமாகும். சில தவறான வழிகாட்டுதல்களினால் பிரிந்து செல்லும் சகோதரர்களை வன்மையாக கண்டிக்காமல் அவர்களுக்கு நல்ல முறையில் சமுதாய ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தி அவர்களையும் ஓரணியில் திரட்டுவதற்கு முயற்சிக்க வேண்டும். அவர்கள் நம்மை வசைபாடும் போது நாமும் அவர்களை வசைபாடுவோமேயானால் நமக்குள் சன்டைகள் பெரிதாகுமேயல்லாது அது பிரச்சனைகளுக்கு தீர்வாகாது. சமுதாய அக்கரையுள்ள, சேவை மனப்பாண்மையுள்ள தலைவர்கள் இதற்காகப் பாடுபட்டு உழைக்க வேண்டும். இன்ஷா அல்லாஹ் நமது சமுதாயம் மிகப் பெரிய எழுச்சியைப் பெறும்!

எல்லாம் வல்ல அல்லாஹ் அதற்குரிய ஆற்றல்களை நமக்குத் தந்தருள்வானாகவும்.

ன்றி:சுவன தென்றல்


ஞாபக சக்தியை அதிகரிக்கும் எளிய உணவு முறைகள் !

கம்ப்யூட்டரில் இருப்பது போல மனிதனுக்கும் ‘மெமரி சிப்ஸ்’கள் உள்ளன. பெரும்பாலும் இந்த நினைவுக் காப்பங்களின் வலிமையும் எண்ணிக்கையும்

பரப்பரைத்தன்மை உடலின் ஊட்டம் ஆகியவற்றைப் பொறுத்தே அமைகின்றன. மாவுச்சத்து வைட்டமின்கள் அமினோ அமிலங்கள் தாது உப்புக்கள் முதலியவையே இந்த ஊட்டத்தை நிர்ணயிக்கவல்லவை.

மனித மூளையில் 100 பில்லியன் நரம்பணுக்கள் உள்ளன. இவை உணவில் கிடைக்கும் வைட்டமின்களைப் பொறுத்து இரசாயன மாற்றங்கள் ஏற்படுத்தியபடி இருக்கின்றன.

ஒரு நாளைக்குப் பத்து இலட்சம் தடவைகளுக்கு மேல் நமது சிந்தனைகளை வகைப்படுத்தும் வேலையை மூளை செய்து கொண்டிருக்கிறது. தினசரி நம் உணவில் கிடைக்கும் (எரிக்கும்) மொத்தக் கலோரியல் முப்பது சதவிகிதத்தை மூளைதான் பயன்படுத்திக் கொள்கிறது. எனவே வயது வித்தியாசம் இன்றி மூளை நன்கு செயல்பட வேண்டும் எனில் இனிப்பு மற்றும் மாவுச்சத்துப் பொருட்களில் உள்ள குளுகோஸில் இருந்துதான் தேவையான சக்தி தொடர்ந்து கிடைக்க வேண்டும்.

இந்தச் சத்துணவில் குறைவு ஏற்படும் போது ஞாபக சக்தியிலும் சிக்கல் வந்துவிடுகிறது.

இது மட்டுமல்ல இரத்த ஓட்டம் தேவையான ஆக்ஸிஜனை மூளைக்கு விநியோகித்து புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதும் முக்கியமானது. தேவையான சத்துணவு கிடைக்காத போது மூளைக்கு ஆக்ஸிஜன் கிடைப்பது குறைந்த ஞாபகசக்தியில் குறைபாடு ஏற்படுகிறது.

இதைத் தடுக்க சிறந்த உணவு முறையையே மருந்தைப்போல் பயன்படுத்தினால் புத்திக்கூர்மையும் ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.

ஞாபக சக்தி குறைவாக இருப்பவர்கள் பைரிடாக்ஸின் என்ற வைட்டமின் அதிகம் உள்ள பாதாம் பருப்பு சோயா பீன்ஸ் முதலியவற்றை நன்கு உணவில் சேர்க்க வேண்டும். இது நம் உடலில் சோடியம் மற்றும் பொட்டாசியம் ஆகிய உப்பு வகைகளை சமன் செய்து உடலை கட்டுப்பாட்டில் வைக்கிறது. இத்துடன் பி12 வைட்டமினை உடல் ஏற்றக் கொள்ளவும் உதவுகிறது.

தேவையான அளவு ஆழ்ந்து சிந்தித்துச் செயல்பட பாலிக் அமிலம் அதிகம் உள்ள தண்டுக்கீரை கொண்டைக்கடலை முதலியவற்றை சேர்த்துக் கொள்வது அவசியம்.

பால், தயிர் மற்றும் அசைவ உணவு வகைகளால் பி12 கிடைப்பதால் சோம்பேறித்தனம் குறையும். சைவ உணவுக்காரர்கள் பி12ஐ ஊசியாகப் போட்டுக் கொள்ளவும்.

அரிசி கோதுமை கேழ்வரகு மேற்கண்ட உணவு வகைகளுடன் இரும்புச்சத்து நிறைந்துள்ள பேரிச்சம்பழம் பட்டாணி முதலியவற்றையும் தினமும் உணவில் சேர்த்து வந்தால் நரம்புமண்டலம் அமைதியாகி மூளை சுறுசுறுப்பாக இருக்கும். இது சிந்தித்து செயல்படுவதில் அக்கறை காட்டத் தூண்டிக் கொண்டே இருக்கும். இந்த உண்மைகளை போஸ்டனின் டப்டஸ் பல்கலைக் கழகமும் வேல்ஸின் ஸ்வான்ஸீ பல்கலைக்கழகமும் பல ஆண் பெண்களையும் பரிசோதனை செய்து கண்டுபிடித்தன.

எல்லா வயதுக்காரர்களும் கூர்மையாகச் சிந்திக்க அரிசி, பருப்பு மற்றும் பழவகைகளைத் தவிர்த்துவிடாமல் உணவில் சேருங்கள்.

ஞாபக சக்தியை அதிகரிக்கும் எளிய உணவு முறைகள்
ஆரஞ்சு கொய்யா திராட்சை ஆப்பிள் வாழைப்பழம் முலாம்பழம் பேரீச்சம்பழம் காரட் அன்னாசி காலிபிளவர் முட்டைக்கோஸ் பசலைக்கீரை கொத்துமல்லி, முருங்கைக்கீரை பச்சைப் பட்டாணி பால் தயிர் ஈரல் போன்ற உணவு வகைகளில் உள்ள பீட்டா கரோட்டின் வைட்டமின் சி இரும்புச்சத்து முதலியன ஞாபக சக்தியை அதிகரிக்க வல்லவை.

இனிப்பு வகைகளைச் சாப்பிடுவதால் அசிட்டியல்சோலைன் என்ற பொருளை மூளை நரம்புகள் வெளியேற்றுகின்றன. இதனால் ஞாபசக்தி அதிகரிக்கிறது.

குளுகோஸ் சாப்பிடுவது நன்று. இல்லையெனில் மாதம் ஒரு நாள் கோதுமை அல்வா சாப்பிடலாம். இதில் சோலைன் அதிகம் இருக்கிறது. ஆனால் முடிந்தவரை இயற்கை இனிப்புகளையே விரும்புங்கள். செயற்கை இனிப்புத் தேவை இல்லை. ஆக ஞாபகச் சக்தியையும் சிந்தனைத் தெளிவையும் தேர்ந்தெடுக்கப்பட்ட உணவின் மூலம் எளிதில் அதிகரித்துக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

http://www.alaikal.com/news/?p=5435

Tuesday, 20 September 2011

பரமக்குடி நகராட்சி அதிமுக வேட்பாளர் அறிவிப்பு !

பரமக்குடி நகராட்சி அதிமுக வேட்பாளராக திருமதி கீர்த்திகா அறிவிக்கப்பட்டுள்ளார்

பரமக்குடி நகராட்சி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கீர்த்திகா டிப்ளமோ மற்றும் எம்.ஏ., படித்துள்ளார். தற்போது பரமக்குடி நகராட்சி தலைவராக உள்ளார். இவரது கணவர் முனியசாமி மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளராக உள்ளார். ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர்..

Monday, 19 September 2011

நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா ! ! !

பல பேருக்கு எப்படியாவது ஒரு
லேட்ப்டாப் வாங்கிவிடவேண்டும் என்று நீண்ட கால கனவு ஒன்று இருக்கத்தான்
செய்யும்.அப்படி கனவு காணும் பலருக்கு பணம் பட்ஜெட் பற்றாக்குறை பிரச்சனையால் லேப் டாப் வாங்க முடியாமல் கால நேரம் தள்ளிபோக்கொண்டிருக்கும். ஆனால் சிலருக்கு ஒரு லேப்டாப் வாங்கும் அளவுக்கு பணம் இருந்தும் நம்மால்
ஒரு தரமான லேப்டாப்பை பார்த்து வாங்க முடியாது அப்படி வாங்க வேண்டுமென்றால்
நல்ல கணினி அறிவு உள்ள ஒரு நண்பர் நம்முடன் ஒன்றாக வரவேண்டுமே அவரை நாம்
எங்கு தேடி பிடிப்பது யாரை நம்புவது என்று தெரியாமல் லேப்டாப் வாங்கும்
படலம் தள்ளிப்போய்க்கொண்டிருக்கும்.
http://tamilcomputertips.blogspot.com/
இனி கவலை வேண்டாம் இந்த பதிவு உங்களுக்காகத்தான். நீங்களே தனியாக தைரியமாக
சென்று ஒரு தரமான லேப்டாப்பை உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி வாங்கி
வரலாம்.லேப்டாப் வாங்க வேண்டும் என்றால் முதலில் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த
மாதிரியான லேப்டாப் பிராண்ட் எதனை வாங்குவதென்று
தீர்மானித்துக்கொள்ளுங்கள்.சிறந்த பிராண்ட் லேப்டாப் வாங்கவேண்டுமென்றால் முதலில் இங்கு
கொடுப்பட்டுள்ள சிறந்த பிராண்டில் எந்த பிராண்டை வாங்கவேண்டுமென்று
முடிவுசெய்துகொள்ளுங்கள்.....SONY,HP,DELL,SAMSUNG,THOSHIBA,LENOVA,ACER.
சரி இனி நீங்கள் வாங்கப்போகும் இந்த பிராண்ட் லேப்டாப்புகளில் எந்தெந்த
விசயத்தை கவனமாக பார்க்கவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்...

Laptop Configuration

Processor

Processor என்பது அனைத்து லேப்டாப் Mother Board களிலும் மிக முக்கியமாக
பொருத்தக்கூடிய சதுரமான ஒரு சிப். இந்த Processor இன்றைய மார்கெட்டில் அதிக
தரம் உள்ளதாக விற்பனையில் உள்ளது Intel Core i7. அடுத்ததாக Intel Core i5
அடுத்ததாக Intel Core i3 என்பதாகும்.எனவே நீங்கள் விலை கூடுதலான ஒரு லேப்டாப்பை வாங்க வேண்டுமென்றால் முதலில் நல்ல ஒரு பிராண்டை தேர்ந்தெடுத்துக்கொண்டு இந்த Processor ஐ

Intel Core i7
Intel Core i5
Intel Core i3

என்ற வரிசையில் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.

இந்த மூன்று வகையான Core வரிசையில் உள்ள Processor களில் ஒன்று உங்கள்
பட்ஜெட்டுக்கு விலை கூடுதல் என்று நீங்கள் நினைத்தால் இவைகளை விட தரம்
குறைந்த Intel Core 2 Duo அல்லது Intel Dual Core என்ற Processor ஐ நீங்கள்
தேர்ந்தெடுக்கலாம்.
http://tamilcomputertips.blogspot.com/

இதை விட தரம் குறைவான Processor ஐ நீங்கள் தேர்ந்தெடுத்தால் அது இன்றைய நவீன டெக்னாலஜிக்கு பொருத்தமானதாக இருக்காது.

Intel® Core™ i7-640M Processor 2.80 GHz

அடுத்ததாக இங்கு மேலே காண்பதுபோல் இந்த Processor உடன் 2.80 GHz என்று
குறிப்பிடு இருப்பதை போல நீங்கள் வாங்கும் லேப்டாப்பிலும் ஒரு நம்பருடன்
GHz என்று குறிப்பிட்டு இருக்கும். இந்த நம்பரையும் நீங்கள் கவணமாக
பார்க்கவேண்டியது மிக அவசியம். ஏனென்றால் இந்த 2.80 GHz என்பதை விட 2.00
GHz அல்லது 1.60 GHz என்பதன் Processor வேகம் மிக குறைவானது. 2.00 GHz
லேப்டாப் மாடலை விட 2.80 GHz லேப்டாப் மாடலின் விலை குறைவானதாக
இருக்குமேயானால் வேறு எந்த டெக்னாலஜி இதில் இல்லை என பார்க்கவேண்டியது
அவசியம்.

RAM

அடுத்ததாக மிக முக்கியமான விசயம் RAM. நீங்கள் கம்ப்யூட்டரை திறந்த பிறகு
ஒன்றுக்கு மேற்பட்ட புரோகிராம்களை பயன்படுத்தும்பொழுது கம்ப்யூட்டரின்
வேகம் குறைந்துவிடாமல் பாதுகாப்பதில் இந்த RAM மிக முக்கிய பங்கு
வகுக்கிறது. அதனால் இன்றைய அட்வாண்ஸ் புரோகிராம்களை பயன்படுத்த நினைக்கும்
நீங்கள் குறைந்தது 2 GB RAM இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள். (4 GB
RAM இருந்தால் சிறந்தது) இதில் இன்னொரு முக்கியமான விசயம் DDR3 என்ற
அட்வாண்ஸ் டெக்னாலஜி கொண்ட RAM நீங்கள் வாங்கும் லேப்டாப்பில்
பொருத்தப்பட்டுள்ளதா என கேளுங்கள். ( பொதுவாக விலை குறைந்த லேப்டாப்
வாங்கும்பொழுது அதில் DDR2 RAM மட்டுமே பயன்படுத்தப்படுகிறது).

HARD DISK

அடுத்தாக நீங்கள் கவனிக்கவேண்டியது இந்த ஹார்ட் டிஸ்க். பொதுவாக
கம்ப்யூட்டரை பற்றிய விபரங்கள் அதிகம் அறியாதவர்கள் கம்ப்யூட்டரின்
இயங்கும் வேகம் அதில் பொருத்தப்படும் ஹார்ட் டிஸ்கின் அளவை பொருத்துதான்
உள்ளது என தவறாக என்னுகிறார்கள். கம்ப்யூட்டர் இயங்கும் வேகத்திற்கும் இந்த
ஹார்ட் டிஸ்கின் அளவுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. ஆனால் இன்றைய
மென்பொருள்களின் அதி வேக வளர்ச்சியின் காரணமாக நாம் ஹார்ட் டிஸ்க் அளவிலும்
கொஞ்சம் கவணம் செலுத்த வேண்டி உள்ளது.

நீங்கள் கோரல்ட்ரா, போட்டோசாப் போன்ற போட்டோ டிசைனிங் மென்பொருள் மற்றும்
வீடியோ டிசைன் செய்யும் மென்பொருள்களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துபவராக
இருந்தால் மற்றும் உங்களுக்கு விருப்பமான ஆடியோ வீடியோ பைல்களை உங்கள்
லேப்டாப்பில் காப்பி செய்து வைத்து பயன்படுத்தும் பழக்கம் உள்ளவராக
இருந்தால் உங்கள் ஹார்ட் டிஸ்கின் அளவு குறைந்தது 320 GB இருக்கவெண்டும்.
ஆடியோ வீடியோ கம்ப்யூட்டரில் காப்பி செய்ய தேவை இல்லை என்றால் 160 GB போதுமானது.
எனக்கு எந்த தேவையும் இல்லை மைக்ரோசாப் ஆபீஸ் மட்டும் தான் பயன்படுத்துவேன்
அடுத்ததாக நான் இண்டெர்நெட் பயன்படுத்துவேன் அதோடு யூடுப் பயன்படுத்துவேன்
என்று நீங்கள் சொல்பவராக இருந்தால் உங்களுக்கு 80 GB ஹார்ட் டிஸ்க் என்பதே
மிக அதிகம்.பொதுவாக இந்த ஹார்ட் டிஸ்குகளில் நீங்கள் பார்க்கவேண்டிய இன்னொரு விசயம்
அதன் வேகம். SPEED 7200 RPM அல்லது SPEED 5400 RPM SPEED போன்றவை மிக
சிறந்தது. இதனை விட நீங்கள் நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் ஹார்ட் டிஸ்க்
ஸ்பீடு குறைந்ததாக இருந்தால் அங்கு இருப்பதில் எது கூடுதலாக RPM என்பதை
தேர்ந்தெடுங்கள்.

DVD DRIVE

நீங்கள் மேலே குறிப்பிட்டது போன்று பிராண்டட் லேப்டாப் வாங்கும்பொழுது DVD
டிரைவை பற்றி அதிக கவணம் எடுக்க தேவை இல்லை. ஏனென்றால் பிராண்டட்
லேப்டாப்புகளில் அதற்கு பொருத்தமான தரமிக்க DVD டிரைவ் பொருத்தி
இருப்பார்கள். இந்த டிரைவில் SuperDrive 8x(DVDR DL/DVDRW/CD-RW) என்பது
போன்ற குறிப்பு இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள்.

GRAPHIC CARD

பொதுவாக விலை குறைந்த லேப்டாப் அல்லது டிஸ்கவுண்ட் விலைகளில் கிடைக்கும்
லேப்டாப்புகளில் இந்த கிரபிக் கார்டு இணைந்திருப்பது இல்லை. கீராபிக்
கார்டு இணைக்கப்பட்டுள்ளது என்று அந்த லேப்டாப் குறிப்பில்
எழுதப்பட்டிருந்தால் அது மற்ற லேப்டாப்பை விட விலை கூடுதலாகவே இருக்கும்.
சரி இந்த கிராபிக் கார்டு இணைந்திருப்பதால் நமக்கு என்ன பயன் ?
நீங்கள் வீடியோ அனிமேசன் மற்றும் போட்டோசாப், கோரல்ட்ரா டிசைனிங் செய்பவராக
இருந்தால் மற்றும் வீடியோ கேம் அதிகம் பயன்படுத்துபவராக இருந்தால்
உங்களுடைய லேப்டாப்பில் கிராபிக் கார்டு இணைந்திருப்பது மிக அவசியமான
ஒன்று. அல்லது உங்கள் லேப்டாப்பில் அதிக தெளிவுமிக்க வீடியோ (HD High
Definition Video) படங்களை பார்க்கவேண்டும் மற்றும் ஸ்டீரியோ இசையுடன்
தெளிவான ஆடியோ பாடல்களை கேட்கவேண்டும் என்ற ஆர்வம் கொண்டவராக நீங்கள்
இருந்தால் இந்த கிராபிக் கார்டு இணைந்துள்ள லேப்டாப் நீங்கள் வாங்குவது
சிறந்தது.

இந்த கிராபிக் கார்டு இணைந்த லேப்டாப்பை நீங்கள் வாங்கும்பொழுது இன்னொரு
முக்கியமான விசயத்தையும் பார்க்கவேண்டியது அவசியம். அதாவது இந்த கிராபிக்
கார்டு Dedicated Graphic அல்லது Integrated graphics (shared memory) என
இரண்டு வகைகளில் லேப்டாப்பில் பொருத்தப்படுகிறது.
இதில் Dedicated Graphic என நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் எழுதப்பட்டிருந்தால் இதுவே சிறந்தது.
இந்த Dedicated Graphic Card உங்கள் லேப்டாப்பில் இணைக்கப்பட்டிருந்தால்
நீங்கள் அதிக கெபாசிடி உள்ள ஒரு வீடியோ கேம் விளையாடும் நேரத்தில் அந்த
வீடியோ கேமுக்கு தேவையான மெமரியை இந்த Dedicated Graphic Card கொடுப்பதால்
கம்ப்யூட்டர் எந்த விதத்திலும் வேகம் குறைவது இல்லை. கம்ப்யூட்டர் மெமரி
அப்படியே இருக்கும். இதனால் வீடியோ கேம் இயங்குவதில் தடை எதுவும் ஏற்படாது.
ஆனால் Integrated graphics (shared memory) என்று குறிப்பிட்டுள்ள லேப்டாப்
நீங்கள் வாங்கினால் இந்த வீடியோ மெமரி உங்கள் கம்ப்யூட்டரின் வேகத்தில்
அதிக இடத்தை எடுத்துக்கொள்வதால் அதிக கெபாசிடி உள்ள வீடியோ கேம்
விளையாடும்பொழுது கம்ப்யூட்டர் மெமரி குறைந்து கம்ப்யூட்டர் எரர் ஆக
வாய்ப்பு இருக்கிறது.அதனால் நீங்கள் 3D வீடியோ கேம் போன்ற அதிக கெபாசிடி உள்ள கிராபிக்
பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் லேப்டாப்பில் Dedicated Graphic Card
இணைந்துள்ளதா என
பார்த்துக்கொள்ளுங்கள்.http://tamilcomputertips.blogspot.com/

போட்டோசாப், கோரல்ட்ரா மற்றும் சின்ன சின்ன கிராபில் சாப்ட்வேர்கள்
பயன்படுத்துபவராக இருந்தால் Integrated graphics (shared memory) உள்ள
லேப்டாப் வாங்கினால் போதும்.

Operating System ( OS)

விலை அதிகம் உள்ள லேப்டாப் வாங்க நினைக்கும் நீங்கள் இந்த ஆபரேடிங்
சிஸ்டத்தில் கவனக்குறைவாக இருந்துவிடாதீர்கள். ஏனென்றால் எல்லாம் சரியாக
இருந்து ஆபரேடிங் சிஸ்டம் சரி இல்லை என்றால் லேப்டாப் பயன்படுத்துவதே
சிரமம் என்று ஆகிவிடும்.இப்பொழுதெல்லாம் அட்வான்ஸ் லேப்டாப்களில் Widows 7 ஆபரேடிங்க் சிஸ்டம்தான் இன்ஸ்டால் செய்து விற்பனை செய்கிறார்கள். ஆனால் இந்த Winsows 7 ல் பல
வித்தியாசம் இருக்கிறது.

Windows 7 Ultimate
Windows 7 Professonal
Windows 7 Home Premium
Windows 7 Home Basic
Windows 7 Starter version

இப்படி விண்டோஸ் 7 வெரிசனில் பல வகை உண்டு.
இதில் Windows 7 Ultimate மற்றும் Windows 7 Professional இவை இரண்டும்
மிகச்சிறந்தது என்றாலும் இந்த வெரிசன் இணைக்கப்பட்ட லேப்டாப்புகள்
மற்றவற்றை விட விலை மிக அதிகமாக இருக்கலாம். இருப்பினும் இதற்கு அடுத்ததாக
மிக சிறப்பாக செயல்படக்கூடிய Windows 7 Home Premium வெரிசனையாவது நாம்
வாங்குவது மிக சிறந்தது. மேலும் இதில் 64 Bit என்ற வெரிசனை
தேர்ந்தெடுங்கள். Windows 7 Home Premium 32 Bit ஐ விட Windows 7 Home
Premium 64 Bit கிராபிக் மென்பொருள் பயனடுத்துவதற்கு மிக சிறந்தது.
http://tamilcomputertips.blogspot.com/

Widows 7 Home Basic மற்றும் Windows 7 starter Version இவை இரண்டிலும்
நீங்கள் எந்த வித நவீன மென்பொருளையும் ( Software) சிறப்புடன் பயன்படுத்த
முடியாது.
அடுத்ததாக புதிய வகை லேப்டாப்புகளில் மைக் வெப் கேம் அனைத்தும் இணைந்தேதான்
வருகிறது.இருப்பினும் இவை உள்ளனவா என பார்த்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் உங்கள் லேப்டாப்பை LCD அல்லது LED T.V யில் HDMI வீடியோ கேபிள்
மூலம் இணைத்து பயன்படுத்த விரும்பினால் நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் HDMI
Port உள்ளதா என பார்த்துக்கொள்ளுங்கள்.Memory Card Slot, Front Mic,
Audio, SRS Speaker System இவை இணைந்ததா என பார்த்துக்கொள்ளுங்கள்.
இது தவிர நீங்கள் வாங்கும் லேப்டாபுக்கு இலவசமாக கிடைக்கும் மவுஸ் மற்றும் லேப்டாப் பேக் கிடைக்கிறதா என கேட்டுக்கொள்ளுங்கள்.
இது போன்ற பல பயனுள்ள தகவல்களுக்கு என்னுடைய தமிழ் கம்ப்யூட்டர் தகவல்கள் தளத்துக்கு செல்லுங்கள்.


நன்றி ! அன்புடன்: கான்
Source: http://www.chenaitamilulaa.net/t21487-topic#205241

இதமாய் காப்போம் இதயம் !

40 வயதுக்கு மேல் உள்ள ஆண்களும், 50 வயதுக்கு மேல் உள்ள பெண்களும் ஆண்டுக்கு ஒருமுறை ரத்த அழுத்த பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

மூச்சுத் திணறல், தோள்பட்டை வலியுடன் கூடிய மார்பு வலி, நடக்கும்போது, ஓடும் போது,உயரமானப் பகுதிகளில் ஏறும்போது மார்பு வலி ஏற்படுதல் போன்றவை மாரடைப்புக்கான அறிகுறிகள்.

ஒருவருக்கு தொடர்ந்து 20 நிமிஷங்களுக்கு மேல் படபடப்புடன் மார்பு வலி ஏற்பட்டால் உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்துக் கொள்வது அவசியம்.

இருதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாயில் கொழுப்புச் சத்துகள் அதிகமாகி ரத்த ஓட்டத்தை தடுப்பதால்தான் மாரடைப்பு ஏற்படுகிறது.

பொதுவாக, இருதய நோய் உள்ளிட்ட எந்த நோயும் நம்மைத் தாக்காமல் இருக்க தினமும் அரைமணி நேரமாவது சீரான உடல் பயிற்சி செய்வது நல்லது.

மேலும், இரவு தூங்கச் செல்வதற்கு முன் ஏறத்தாழ இரண்டு மணி நேரத்துக்கு முன்பே சிறிய அளவு உணவு சாப்பிட வேண்டும். முடிந்தளவு சாதத்தை தவிர்ப்பது நல்லது.

இருதய நோயைத் தவிர்க்க நினைப்பவர்கள் முதலில் புகைப் பிடிப்பதையும், மது அருந்துவதையும் நிறுத்த வேண்டும்.

இதுதவிர, இறைச்சி, எண்ணெய் பலகாரங்கள், கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

எந்தச் சூழ்நிலையிலும் மன அழுத்தத்துக்கு ஆளாகமல் இருத்தல் அவசியம். ஒரே நேரத்தில் பல வகையான சிந்தனைகளில் ஈடுபடுவதால் மன அழுத்தம் ஏற்படுகிறது.