பரமக்குடியில் ஜான்பாண்டியன் கைதை கண்டித்து இன்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கலவரம் ஏற்பட்டது. தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவு இடத்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் புறப்பட்டு வந்தபோது தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவத்தை கண்டித்து பரமக்குடி ஐந்து முனை ரோட்டில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தொண்டர்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் “திடீர்” சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரமக்குடி-ராமேசுவரம் சாலையில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் துணை கமிஷனர் செந்தில்வேலன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்குமார், டி.எஸ்.பி. கணேசன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் விரைந்து வந்து பொதுமக்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை.

இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து போலீசார் மீது சரமாரியாக கற்களை வீசினர். சுமார் 100 போலீசாரே இருந்ததால் வன்முறையை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் போலீசார் உயிர் பிழைத்தால்போதும் என நினைத்து எஸ்.பி. மற்றும் டி.எஸ்.பி. போலீசார் சிதறி ஓடினர்.
போராட்டக்காரர்கள் போலீசாரை விடாமல் விரட்டி சென்று கற்களை வீசி எறிந்தனர். இதில் துணை கமிஷனர் செந்தில்வேலன்,டி.எஸ்.பி. கணேசன் ஆகியோர் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அப்போது ரோட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த போலீஸ் வேனுக்கு தீ வைக்கப்பட்டது.
அப்பகுதியில் உள்ள சில கடைகளுக்கும் தீவைக்கப்பட்டது. இதனால் அந்த பகுதி போர்க்களமாக காட்சி அளித்தது. உச்ச கட்ட கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 3 பேர் பலியானார்கள் மேலும் மதுரை சிந்தாமணியில் நடைபெற்ற கவலவரத்தை கட்டுப்படுத்த நடந்த போலீஸ் துப்பாக்கி சூட்டில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
நன்றி மலை மலர்
No comments:
Post a Comment