பரமக்குடி நகராட்சி தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., சார்பில் போட்டியிட கீர்த்திகா(நகராட்சி தலைவர்) நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார். முன்னாள் அமைச்சரும், மாவட்ட பொறுப்பாளருமான அன்வர்ராஜா, மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான முருகன், பரமக்குடி எம்.எல்.ஏ., டாக்டர் சுந்தரராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., பாலுச்சாமி, நகர செயலாளர் ஜமால், மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் முனியசாமி உட்பட கட்சியினர் உடனிருந்தனர். கீர்த்திகா கூறியதாவது: கடந்த ஐந்து ஆண்டுகளில் நகராட்சியில் பல்வேறு திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ரயில்வே லைனையொட்டி, கடந்த 40 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த வாறுகால் சீரமைக்கப்பட்டுள்ளது. தானியங்கி குப்பை வாகனம் மூலம் வார்டு முழுவதும் தொட்டிகள் அமைத்து நகர் சுத்தமாக வைக்கப்பட்டுள்ளது. பாதாளசாக்கடைத்திட்டம், புறவழிச்சாலைத் திட்டம், சூப்பர் மார்க்கெட், புதிய பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பல திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன, என்றார்.Friday, 23 September 2011
பரமக்குடி நகராட்சி தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., சார்பில் கீர்த்திகா. வேட்பு மனுத்தாக்கல் செய்தார் !
பரமக்குடி நகராட்சி தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., சார்பில் போட்டியிட கீர்த்திகா(நகராட்சி தலைவர்) நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார். முன்னாள் அமைச்சரும், மாவட்ட பொறுப்பாளருமான அன்வர்ராஜா, மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான முருகன், பரமக்குடி எம்.எல்.ஏ., டாக்டர் சுந்தரராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., பாலுச்சாமி, நகர செயலாளர் ஜமால், மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் முனியசாமி உட்பட கட்சியினர் உடனிருந்தனர். கீர்த்திகா கூறியதாவது: கடந்த ஐந்து ஆண்டுகளில் நகராட்சியில் பல்வேறு திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ரயில்வே லைனையொட்டி, கடந்த 40 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த வாறுகால் சீரமைக்கப்பட்டுள்ளது. தானியங்கி குப்பை வாகனம் மூலம் வார்டு முழுவதும் தொட்டிகள் அமைத்து நகர் சுத்தமாக வைக்கப்பட்டுள்ளது. பாதாளசாக்கடைத்திட்டம், புறவழிச்சாலைத் திட்டம், சூப்பர் மார்க்கெட், புதிய பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பல திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன, என்றார்.
Labels:
அரசியல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment