Thursday, 15 September 2011

வேலை தேடும் இஸ்லாமிய மாணவர்களுக்கு !

ராணி பேட்டை B H E L வேலை !

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் இயங்கி வரும் BHEL நிறுவனத்தில் உள்ள Artisans பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்: Artisans

காலியிடங்கள்: 180 (UR-92, OBC-51, SC-35,ST-2) இதில் முன்னாள் ராணுவத்தினருக்கு 26 இடங்களும், PHபிரிவினருக்கு 9 இடங்களும் அடங்கும்.

சம்பளம்: ரூ.11,700 - 23,000

வயதுவரம்பு: 01.09.2011 தேதிப்படி 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC/STபிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், PH பிரிவினருக்கு தலா 10 வருடங்களும் சலுகை அளிக்கப்படும். முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிமுறைப்படி சலுகை வழங்கப்படும். Artisansபணியில் பணி அனுபவம் உள்ளவர்களுக்கு பணி அனுபவத்தை பொறுத்து 7 ஆண்டுகள் வரை சலுகை வழங்கப்படும்.

கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் கீழ்வரும் தொழிற்பிரிவுகளில் ஐடிஐ படிப்பை முடித்து NTC மற்றும்NAC சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும். ஐடிஐ படிப்பில் OBC , பொது பிரிவினர் 60 சதவிகித மதிப்பெண்களும், SC/ST பிரிவினர் 55 சதவிகித மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தொழிற்பிரிவுகள் வாரியாக காலியிட பகிர்வு வருமாறு:

1. Fitter -98

2.Welder -56

3.Electrician -6

4. Material Handling Operator -11

5.Instrument Mechanic -3

6. Millwright Mechanic-3

7. Electronics Mechanic-3

தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் வேலைக்கு தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத்தேர்வில் கொள்குறி வகையில் கேள்விகள் கேட்கப்படும். கேள்வித்தாள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அமைந்திருக்கும். எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். நேர்முகத்தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு பயணச்சீட்டை சமர்பித்தால் பயணக் கட்டணம் வழங்கப்படும்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 06.11.2011

எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை

விண்ணப்பக் கட்டணம்: ரூ.125.

விண்ணப்பக் கட்டணத்தை 'Power Jyoti Account No: 31170378124" என்ற பெயரில் பணமாக செலுத்தி அதற்குரிய செல்லானை பெற்றுக்கொள்ளவும். பணத்தை முகுந்தராய புரத்திலுள்ள SBI வங்கி கிளை கோடு: 7013. SC/ST/PHபிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: www.bhel.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்திச் செய்து அனுப்ப வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.09.2011. ஆன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்திச் செய்து அனுப்பியபின் ஆன்லைன் விண்ணப்பப் படிவ பதிவு சான்றை பதிவிறக்கம் செய்து அதனுடன் விண்ணப்பக் கட்டண சான்று மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்ப கவரின் மீது"Application for the Post of Artisans in BHEL - Ranipet" என்று குறிப்பிடவும்.

தபாலில் விண்ணப்ப படிவ பதிவு சான்று மற்றும் சான்றிதழ்களின் நகல்கள் வந்து சேர கடைசி நாள்:01.10.2011

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

DGM/HR,

BHEL,

Ranipet -632406,

Vellore District, Tamilnadu.

No comments:

Post a Comment