ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ”ஒரு பெண்மணி அதிகம் தொழுகை, நோன்பு,
தர்மம் செய்பவளாகக்கருதப்படுகிறாள்; ஆனால் அவள் அண்டை வீட்டாருக்குத் தன் நாவால்
தொல்லை தருகிறாள்.(இவளைப் பற்றிதாங்கள் என்ன கூறுகிறீர்கள்?)” என்று கேட்டார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘இவள் நரகில் இருப்பாள்’என்றார்கள். இன்னொரு பெண்மணி
குறைந்த நோன்பு, தர்மம், தொழுகை உடையவளாக இருக்கிறாள் என்றுகருதப்படுகிறாள்.
அவள் தர்மம் செய்தால் வெண்ணைத் துண்டுகளைத் தான் தர்மம் செய்வாள். ஆனால்
அவள்அண்டை வீட்டாருக்கு நாவால் தொல்லை தருவதில்லை. (இவளைப் பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?) என்றுகேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘இவள் சுவர்க்கத்தில் இருப்பாள்’ என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர) நூல்: அஹ்மத் 9298
No comments:
Post a Comment